ஜனாதிபதி முறைமை ரத்து?
ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுநிர்வாக மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இந்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_49.html

பொதுநிர்வாக மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
இந்திய முறையில் விசேட சபையொன்றின் மூலம் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதி தெரிவு குறித்த விசேட முறைமைகள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படும்.
இந்த புதிய முறைமை குறித்து அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக இது தொடர்பிலான யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் புதிய ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் அவ்வாறே இருக்கும் அவரது பதவிக் காலம் முடிவடைந்து புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போதே புதிய அதிகாரங்கள் அமுலில் இருக்கும் என அமைச்சர் கரு ஜயசூரிய சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate