பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மூன்று முனைகளில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்...

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மூன்று முனைகளில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தனித் தனி கூட்டணிகளை அமைத்து தேர்தலில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலுக்காக கிராம மட்டத்தில் ஏற்கனவே ஒழுங்கமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன சில கட்சிகள் அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடவுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துக்கொள்ளவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்சவின் கூட்டணிகள் இன்னமும் சின்னம் பற்றி தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

இலங்கை 3936267467455464695

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item