புலிகளின் சொத்துக்களை பெற்றுக்கொள்ள மைத்திரி அரசாங்கம் முயற்சி

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமான ஐந்து நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகின்றன.

இந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவு சொத்துக்களை வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புலிகளுக்குச் சொந்தமான வாகன விற்பனை நிறுவனங்கள், டீன் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 170 வர்த்தக நிறுவனங்கள் கனடாவில் காணப்படுகின்றன.

சுவிட்சர்லாந்தின் முக்கிய வங்கியொன்றில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

புலிச் செயற்பாட்டாளர்கள் இந்த சொத்துக்களை குறித்த நாடுகளில் தொடர்ந்தும் நிர்வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related

இலங்கை 7842958953787382643

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item