தவறான தீர்ப்பு: எனது இளமையை நீதிமன்றத்தால் திருப்பி தர முடியுமா? ஒரு நிரபராதியின் வேதனை
கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், 30 வருட சிறை தண்டனைக்கு பிறகு நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால் தற்போது விடுதலை செய்யப்பட்...


அலபாமா(Alabama) மாகாணத்தில் உள்ள Birmingham நகரில் வசித்து வருபவர் Anthony Ray Hinton – Age 58. கடந்த 1985 ஆம் ஆண்டில் ஹொட்டல் மேலாளர்கள் இருவரை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது வீட்டில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்த குண்டுகளை வைத்து அவர் தான் குற்றவாளி என தீர்மானித்த நீதிபதிகள் அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தனர்.
தான் கொலை செய்யவில்லை என ஹிண்டன் வாதாடியபோதும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டு ‘அனைவருக்கும் சம நீதி’ என்ற சிறப்பு அம்சத்தை பயன்படுத்தி தனது வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு வலியுறுத்தினார்.
இதன் பின்னர், சுமார் 16 ஆண்டுகள் துப்பாக்கி குண்டுகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்ததில், மேலாளர்கள் சுடப்பட்டு இறந்த துப்பாக்கிக்கும், அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று ஹிண்டன் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால், நீதிபதிகள் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
Jefferson Country சிறை வளாகத்தை விட்டு வெளியே வந்த அவரை அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வாழ்த்தி வரவேற்றனர்.
தீர்ப்பு குறித்து பேசிய ஹிண்டனின் வழக்கறிஞரான Bryan Stevenson, ஹிண்டன் மிகவும் ஏழை என்பதால், அவரால் திறமையான வழக்கறிஞரை நியமித்து வாதாட முடியவில்லை என்று கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆன ஹிண்டன் கூறுகையில், கடவுளிடம் தான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
எனினும், தன்னுடைய இளமை காலம் முழுவதையும் சிறையிலேயே கழித்து விட்டதால், அதை ஒருபோதும் இந்த நீதிமன்றத்தால் திருப்பி வழங்க முடியாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.