ஐ.எஸ்.அமைப்பினால் உயிரச்சுறுத்தல் பொது பல சேனா பொலிஸில் முறைப்பாடு!!
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே ஆகியோருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின...


பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே ஆகியோருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே இந்த முறைப்பாட்டினை நேற்று பொலிஸ் மா அதிபரிடம் முன் வைத்துள்ளார்.
சிரியாவில் வைத்து விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கையரான நிலாமின் பேஸ் புக் பக்கத்தில் ஞானசார தேரரை கொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், பொது பல சேனா அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தொடர்பில் அவர்களால் தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் டிலந்த விதானகே பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
அதனை விட மியன்மாரின் சர்ச்சைக்குரிய 969 என்ற அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரையும் கொலை செய்ய அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் அச்சுறுத்தல் உள்ளதாகவும் டிலந்த விதானகே பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.