பயணிகளுடன் சென்ற விமானம் காணாமல் போனதால் பரபரப்பு: தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய அதிகாரிகள்
அமெரிக்காவில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானத்தை தேடும் ...


அமெரிக்காவில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Montana என்ற நகரிலிருந்து Beech 35 என்ற சிறிய ரக விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடையாததால் பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, வாஷிங்டன் விமான போக்குவரத்து அதிகாரிகளை தொடர்புக்கொண்டு புகார் அளித்ததை அடுத்து, சிறப்பு மீட்பு குழுவினரை அமைத்து விமானத்தை தேடும் பணியில் இறங்கினர்.
தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு குழுவினருக்கு நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் விமான பயணிகளில் ஒருவருடைய கைப்பேசி சிக்னல் கிடைத்துள்ளதை கண்டுபிடித்தனர்.
ஆனால், விமானம் விபத்துக்குள்ளானதா என்று உறுதியாக தகவல்கள் எதையும் மீட்பு குழுவினர் வெளியிடவில்லை.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சாதனங்களின் உதவியுடன் நடைபெறும் தேடுதல் பணி திங்கள் கிழமையும் தொடரும் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த Leland Bowman(62), Sharon Bowman(63) மற்றும் Autumn Veatch(16) என 3 பேர் பயணம் செய்ததாக அவர்களின் உறவினர்கள் விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.