ஓசை எழுப்பிய விமானங்கள்: பிரித்தானிய ராணிக்கு கிடைக்கப்போகும் நஷ்டஈடு
பிரித்தானியாவில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் மூன்றாவது ஓடு பாதை அமைக்க அந்நாட்டு அரச முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையம் அருகே தான் ப...


பிரித்தானியாவில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் மூன்றாவது ஓடு பாதை அமைக்க அந்நாட்டு அரச முடிவு செய்துள்ளது.
இந்த விமான நிலையம் அருகே தான் பிரித்தானிய ராணி எலிசபெத்தின் விண்ட்சர் மாளிகை உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ராணியின் விண்ட்சர் மாளிகை அருகே குறுக்குப்பாதைகள் போடப்படவுள்ளன, அவற்றில் தரையிறங்க விமானங்கள் தாழ்வாக பறக்கும்போது உண்டாகும் இரைச்சல் விண்ட்சர் மாளிகை உட்பட சுற்றுப்புற வீடுகளில் வசிக்கும் 1,60 லட்சம் குடும்பங்களையும் பாதிக்கும்.
எனவே இந்த பாதிப்பிற்கு இழப்பீடாக 7 மில்லியன் பவுண்ட்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் 13 ஏக்கர் அமைப்பில் அமைந்துள்ள விண்ட்சர் மாளிகையின் உரிமையாளரான எலிசபெத்திற்கு பெரும்பான்மையாக தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இத்தொகை கடந்த 10 ஆண்டுகளில் விமான இரைச்சலுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டை விட அதிகமாக இருக்கும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விண்ட்சர் மாளிகைக்கு வார இறுதி நாட்களில் எலிசபெத் வந்து செல்வார், மேலும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் இந்த மாளிகையை பார்வையிட வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.