சுஷ்மா மங்கள சமரவீரவின் கைகளை விடவே இல்லை: இறுக்கமாக பிடித்திருந்தார் !
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவரின் கைகளை, முன்னர் எந்த ஒரு இந்திய வெளியுறவு அமைச்சரும் இதுபோல பிடித்தது இல்லை என்று சொல்லலாம். அந்த அ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_680.html
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவரின் கைகளை, முன்னர் எந்த ஒரு இந்திய வெளியுறவு
அமைச்சரும் இதுபோல பிடித்தது இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இறுக்கமாக பிடித்திருந்தார்
சுஷ்மா. ஏற்கனவே என்ன நடக்க இருக்கிறது என்பதனை நன்றாக அறிந்தவர்போல அவர் காணப்பட்டார்.
இலங்கை மற்றும் இந்தியாவின் உறவில் புது அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக,
அவர் குறிப்பிட்டும்
உள்ளார். அதேபோல மங்கள சமரவீரவும், இந்தியாவுக்கே முதல் இடம் என்பதுபோல பேசியுள்ளார். இதனை எல்லாம்
வைத்துப் பார்க்கும்போது, ரணிலின் கட்சி இலங்கையில்
ஆட்சியைப் பிடிக்கும் என்பதனை அமெரிக்கா மிக நன்றாக இந்தியாவுக்கு எடுத்துக் கூறியுள்ளதே
புலப்படுகிறது.
சீனாவுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் தற்போது குப்பைப்த் தொட்டியில்
தான் கிடக்கிறது. இந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னணியில் அமெரிக்கா தலையீடு இருக்கிறது
என்பதனை சீனா சற்று தாமதமாக தான் உணர்ந்துள்ளது என்கிறார்கள். இறுதி நேரத்தில் தான்
மகிந்தருக்கு உதவிகளைப் புரிய சீனா முற்பட்டுள்ளது. ஆனால் அது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது
என்கிறார்கள். அமெரிக்கா போட்டு கொடுத்த திட்டத்தை, அப்படியே சந்திரிக்கா நிறைவேற்றியுள்ளார். மேலும் இந்தியா தற்போது நிம்மதியடைந்துள்ளது.
சீனா இலங்கை உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும் என்று பலரும் நம்புகிறார்கள்.
இதேவேளை விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்காமல் இருக்கவேண்டும், என்ற கோரிக்கையையும் சுஷ்மா
சுவராஜ் மங்கள சமரவீரவிடம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளாராம். இதனை அடுத்தே வட கிழக்கில்
இருந்து நாம் ராணுவத்தை முற்றாக நீக்கமாட்டோம் என்று ரணில் அறிவித்தல் ஒன்றையும் விட்டு,
இந்தியாவை மனம் குளிரச்செய்துள்ளார்.
கருணாவை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிக்க, ஐக்கிய தேசிய கட்சியே காரணமாக அமைந்தது.
ஆனால் இந்திய ராணுவம் வன்னிக் காடுகளை முற்றுகையிட்டு, தேசிய தலைவரை பிடிக்க முற்பட்டவேளை,
ஒப்பந்தத்தை கிழித்து
எறிந்து, இந்திய
ராணுவத்தை உடனடியாக வெளியே போகச் சொன்னதும் ஐக்கிய தேசிய கட்சியின் அப்போதைய தலைவர்
பிரேமதாசா தான். இதனால் இந்தியாவுக்கு இது தொடர்பாக ஒரு சிறிய பயம் எப்பவுமே உள்ளது
எனலாம்.