மகிந்தவிடம் சி.ஐ.டி பிரிவினர் செல்ல உள்ளார்கள்: 10 வருடத்தில் நடக்காத ஒன்று !
ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சதிமுயற்சி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்...


முன்னெடுப்பதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக பொலிஸ்
தலைமையகம் குறிப்பிட்டது. இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான
அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனையடுத்து, சட்ட மாஅதிபரின்
ஆலோசனையின் பிரகாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். எதிர்வரும் சில தினங்களில் இந்த விவகாரம் தொடர்பில்
வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்கும், அதன் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்
அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே சட்டமா அதிபர் ஆலோசனைப்படி, மகிந்தரையும் சி.ஐ.டி பிரிவினர்
விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் மகிந்தரை எவராலும் ஆட்ட
முடியாது என்று பலர் கூறினார்கள். சில தமிழர்கள், இலங்கைக்கு சுற்றுலா சென்றுவந்து மகிந்தர்
படு பவர்புல்லாக இருப்பதாக கூறினார்கள்.
மகிந்தரை அனுசரித்துபோவதே நல்லது. அவர் உதவியோடு தான் வட கிழக்கில் உள்ள மக்களுக்கு
உதவி புரியலாம் என்று கதா பிரசங்கங்களை நடத்தினார்கள் சில தமிழர்கள். இப்ப என்ன ஆச்சு
? என்று பார்த்தீர்கள் தானே.
இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் இணைந்து மகிந்தவை தூக்கி எறிந்துள்ளார்கள்.
அவர் விழுந்திருப்பது பாதாளத்தில். மீண்டு வர முடியாது.