ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள கிழக்கில் மு.கா குழுவினர் திட்டம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தில் SLMC ஐ சேர்ந்த ஒருவரை அமர்த்தும் போது அவர் தன்னை விட பெரியவர் ஆகிவிடுவார் என்ற அச்சத்தில்தான் தலைவர் அதை...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_265.html

தற்போது முதலமைச்சராக இருக்கின்ற நஜீப் அப்துல் மஜீத் கூட முதலமைச்சர் ஆனதன் பின்னணி மகிந்த ராஜபக்ஷ மட்டும் அல்ல தலைவர் ஹகீம் அவர்களுமே. ஏனென்றால் இருவருமே ஒரு பொம்மை முதலமைச்சர் இருப்பதையே விரும்பினார்கள். ஆனால் தலைவர் வெளியில் தான் பெரிய தியாகியை போன்று கதைத்து திரிகிறார்.
கிழக்கு மாகாண அமைச்சரவையில் மாற்றங்களை செய்துவிட்டு SLMC இல் ஒருவருக்கு முதலமைச்சர் வழங்கி இருக்கும் ஆளும் கட்சியியை வைத்தே கிழக்கின் ஆட்சியை நடத்தாமல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பேச்சு நடத்துவதற்கும் ஆட்சியமைப்பதட்கும் எதுவித தேவைப்பாடும் இல்லாத சந்தர்ப்பத்தில் எதற்காக தலைவர் அதற்கு முனைகிறார்.
மறைந்த மாமேதை மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்ரப் அவர்களுடைய இலட்சியம், கனவாக இருந்த கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை எமது தலைவர் ஹகீம் அவர்கள் விட்டுக்கொடுப்பாராக இருந்தால் அவருக்கு எதிராக எதிராக நாங்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தலைவரே உங்களுடைய சுய மரியாதைக்காக எமது சமூகத்தை பலியாக்கதிர்கள். முஸ்லிம் முதலமைச்சருக்கு கூட்டமைப்பு ஒத்துவரவில்லை என்றால் கடந்த காலங்களை போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமையுங்கள். அதற்கு முன்னர்தான் மஹிந்த ராஜபக்ஷ தலைவர் இப்பொழுது மைத்திரி இதை மறந்து விடாதிர்கள்.
மீண்டும் மூன்று மாதங்களின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே ஆளும் கட்சியாக மாறும். ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் போட்டியிட்டு அவர்களே இன்ஷால்லாஹ் மீண்டும் ஆட்சியை அமைப்பார்கள். தலைவரே சிந்தியுங்கள். தவறும் பட்சத்தில் இந்த சமூகம் எதிர் கொள்ள போகும் விபாரீதங்களுக்கு நீங்களே பொறுப்புதாரி.