பிரசன்ன ரணதுங்கவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நாளை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ம...


முதலமைச்சர் மற்றும் 03 பேர் இணைந்து நடத்தும் தனியார் வியாபாரத்தின் ஒரு பங்குதாரரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மேல் மாகாண முதலமைச்சரின் மனைவியான மோரின் ரணதுங்கவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பில் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களை கைது செய்து அவரது தேர்தல் வியாபாரங்களை வலுவிழக்க செய்ய முயற்சிப்பதாக பிரசன்ன ரணதுங்க இவ் அழைப்பிற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் ஒரு கட்டமாக தன்னை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் நாளை காலை 09 மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.