பௌத்த பிக்குனிகளினால் வாக்களிக்க முடியாத நிலைமை
தேசிய அடையாள அட்டை இல்லாத பௌத்த பிக்குனிகளினால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 1250 பௌ...


சுமார் 1250 பௌத்த பிக்குனிகளினால் இவ்வாறு தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரங்கிரி தம்புள்ள இனாமலுவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு முதல் பௌத்த பிக்குனிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகளை தேசிய ஆட்பதிவு திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
இதனால் பௌத்த பிக்குனிகளினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பௌத்த பிக்குனிகள் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமையும் எனவும் சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளரிடம் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இவ்வாறான பௌத்த பிக்குனிகள் தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.