மஹிந்த தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கான வரப்பிரசாதங்களை நீக்கவும்: அகிலவிராஜ் -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம் மற்றும் ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களை நீக்குமாறு ஐக்கிய ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம் மற்றும் ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களை நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று சிறிகொத கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவாராயின், அவருக்கு இவ்வாறு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருப்பது மற்றைய வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டால் அம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தான் அதனை மிகவும் விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.