கருணாவுக்கு கிடைத்த பெரிய ஏமாற்றம்!
கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி த...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_626.html

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளிக்க மறுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கருணாவின் பெயர் இடம்பெறவில்லை.
முன்னதாக, கருணாவை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கேட்டிருந்தது. எனினும் மட்டக்களப்பில் ஒரு வேட்பாளராக தேர்தலைச் சந்திக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த முறையைப் போலவே தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் வாக்குறுதி அளித்திருப்பதாக கருணா கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார்.
எனினும், இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெளியிடப்பட்டுள்ள தேசியப்பட்டியலில் கருணாவின் பெயர் இடம்பெறவில்லை.
மஹிந்த அரசாங்கத்தின் போது இரண்டு தடவைகளும் கருணா தேசிய பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.