யானையை வெல்ல வைத்து மகிந்தவை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி மேடையில் சந்திரிக்கா.
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட...

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிங்கள மொழி இணையங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று கம்பஹா ஐக்கிய தேசிய கட்சி மேடையில் ஏறவுள்ளதாகவும்,
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வெற்றிக்காக அத்தகல்ல பிரதேசத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சி மக்கள் சந்திப்புகள் பலவற்றில் சந்திரிக்கா குமாரதுங்க கலந்துகொள்ளவுள்ளதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
வெளிநாடு சென்றிருந்த சந்திரிக்கா குமாரதுங்க நேற்று இரவு இலங்கைக்கு வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.