மஹிந்தவை தோற்கடிக்க தந்திரமாக செயற்படும் மைத்திரி!
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமிக்கவராக காணப்படுகிறது. மஹிந்தவுக்கான மக்க...


சிறிலங்காவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமிக்கவராக காணப்படுகிறது.
மஹிந்தவுக்கான மக்களின் ஏகோபித்த ஆதரவு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நடவடிக்கைக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் மஹிந்தவை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி இன்று அலரி மாளிகையில் வைத்து உத்தியோகபூர்வ ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியியை சேர்ந்த பலரும் இணைந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் பல கட்சிகளை இணைந்து கொள்ளுமாறும் ரணில் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறு கட்சிகளும் இதில் இணையவுள்ளன.
மஹிந்தவுக்கு எதிரான இந்தக் கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆதரவுடனே அமைக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
மைத்திரி தன்னை கட்சியை காப்பாற்றும் சிறந்த தலைவராக காட்டிக்கொள்ள, தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கினாலும், அவரை தோற்கடிக்க திரைமறைவில் வேலை செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்பதே மைத்திரியின் எண்ணமாகவும் உள்ளது.
புதிய கூட்டணியின் உருவாக்கமானது மஹிந்த தரப்பை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. மஹிந்தவை தோற்கடிக்க சாதகமான கூட்டணி என எதிர்பார்க்கப்படுகிறது.