இராணுவ வீரர்களுக்கு சர்வதேச பயிற்சி: ஜனாதிபதி
கடந்த மாதங்களில் தான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மூலமாக பாதுகாப்பு தரப்பினருக்கு சர்வதேச பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வழிவகுப்பதா...


கட்டுநாயக்காவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலத்தில் தான் சந்தித்த வெளிநாட்டு தலைவர்களுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடாத்தியதன் மூலமாக பாதுகாப்பு தரப்பினருக்கு இந்தப் பயிற்சியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் தாய் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினர் போன்றே அவர்களின் குடும்பத்திற்கும் நலன்புரி சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.