முஸ்லிம் மதத் தலைவர்கள் பள்ளிவாசல்களில் இறுதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் கருத்துக்களை வெளியிடுகின்றனர் -ஞானசார
வடக்கு சுயாட்சி குறித்த கருத்துக்கள் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன முன்னணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார த...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_446.html
வடக்கு சுயாட்சி குறித்த கருத்துக்கள் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன முன்னணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு சுயாட்சி குறித்து வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களை கவனத்திற் கொண்டு தெற்கு அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
சிறுபான்மையினக் கட்சிகள் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றன.
குறிப்பாக முஸ்லிம் மதத் தலைவர்கள் மத வழிபாட்டுத் தலங்களுக்குள் இறுதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட்டு மக்களை வழிநடத்துகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக நான் எதிர்வு கூறிய விடயங்கள் நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக 1818ம் அண்டு இடம்பெற்ற விடயங்கள் நாட்டில் இடம்பெறும்
1818ம் ஆண்டில் வெளிநாட்டவர்கள் நாட்டை போரின் மூலம் ஆக்கிரமிக்கவில்லை, மேற்குலக நாடுகளின் காலனித்துவ தலைவர்கள் 1818ம் ஆண்டில் போன்று இரத்த சிந்தாமல் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர்.
இந்தநிலையில் எவ்வாறான அரசியல் கொள்கைகள் காணப்பட்டாலும் நாட்டையும் இனத்தையும் கருத்திற் கொண்டு பிரதான அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.