ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம்: மாற்றம் விதைத்த பேஸ்புக்
ஆண், பெண் சமத்துவத்தை சகலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தன் பங்கிற்கு பேஸ்புக்கும் சிறு மாற்றத்தைச் செய்துள்ளது. பேஸ்புக் பக்கத்தில் உள...


ஆண், பெண் சமத்துவத்தை சகலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தன் பங்கிற்கு பேஸ்புக்கும் சிறு மாற்றத்தைச் செய்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் ஐகனில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்துள்ளது.
மாற்றத்திற்கான விதை என்றுமே ஒரு சிறுதுளியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது.
அது போன்ற ஒரு அடியைத்தான் இந்த சமுதாயத்திற்காக எடுத்து வைத்துள்ளது சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக்.
சமூக பிரச்சினையில் அக்கறை காட்டி வரும் பேஸ்புக்கின் இந்த செயற்பாடு வரவேற்கத் தக்கது.
முன்னர் ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் ஐகனில் ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போன்று இருந்தது. தற்போது பெண்ணின் பின்னால் ஒரு ஆண் இருப்பதைப் போன்ற ஐகனை வைத்துள்ளது பேஸ்புக்.
மேலும், முன்பு இருந்த ஐகனில் பெண்ணின் உயரம், ஆணுக்கு சற்று குறைவாக இருக்கும். ஆனால், தற்போதைய ஐகனில் இரண்டு உருவங்களுமே சரிசமமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.