சுதந்திரக் கட்சி பிரசாரக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமை தாங்கமாட்டார்! கட்சிக்குள் பதற்றநிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிச...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கட்சி தரப்பினரிடையே பதற்ற சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.

அதேநேரம் சிறிசேன பிரசாரங்களில் பங்கேற்காத நிலையில், மஹிந்த ராஜபக்சவை பிரசாரக்குழு தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா வலியுறுத்திய போதும் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை.

இது தொடர்பில் இறுதித்தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருடன் ஜனாதிபதி இணக்கத்தை ஏற்படுத்தினார்.

எனினும் ஊழல் மற்றும் ஏனைய கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்குவதில்லை என்று அவர்கள் உடன்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

இலங்கை 6354619550088887604

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item