சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதியினர் அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக அர...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_83.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.
தனித்து போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate