மகிந்த மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக 7000 முறைப்பாடுகள்!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக 7000 முறைப்பாடுகள் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். க...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக 7000 முறைப்பாடுகள் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துரையில் இடம்பெற்ற மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான 7000 முறைப்பாடுகளில் 53 முறைப்பாடுகளின் விசாரணைகளை நிறைவடைந்துள்ளது.
அவ்வாறு விசாரணைகள் நிறைவடைந்து முறைப்பாடுகளில் ரகர் விளையாட்டு வீரர் தாஜுடீன் கொலை சம்பந்தமானவைகளும் உள்ளடக்கப்படும்.
அது உட்பட விசாரணைகள் நிறைவடைந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.