சீனாவில் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது தொடர்பில் அரசு பரிசீலனை!!

உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக சில தசாப்தங்களாகவே ஒர...




உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக சில தசாப்தங்களாகவே ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் அமுலில் இருந்து வருகின்றது.
ஆனாலும் அண்மையில் தம்பதியரில் யாரேனும் ஒருவர் தமது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக மாத்திரம் இருக்கும் பட்சத்தில் குறித்த தம்பதியினர் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம என இச்சட்டம் சற்றுத் தளர்த்தப் பட்டிருந்தது.

ஆனால் தற்போது சீனா முழுதுமே தம்பதியர் அனைவரும் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது தொடர்பில் சட்டத்தைத் திருத்தியமைக்க அந்நாட்டு அரசு அரச பொருளியல் வல்லுனர்களுடன் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம் சீனாவில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விந்தணுக்களை விற்பனை செய்யவுள்ளதாக அலிபாபா என்ற நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. இதன் பிரதான நோக்கம் சீனாவில் விந்தணு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நன்கொடையாளர்களுக்கு வழிகாட்டுவதும் என்பதே அமைந்துள்ளது.

தற்போது இப்பிரச்சாரத்தின் அடிப்படையில் பல சீனர்கள் தமது விந்தணுக்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இதற்கென 3 நாள் முகாம் நடத்தும் அலிபாபா நிறுவனம் விந்தணுக்களை விற்பனை செய்யும் ஆண்களுக்கு 500 டாலரில் இருந்து 800 டாலர் வரை சன்மானமும் அளிக்கப் படும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் விந்தணுக்கள் தானம் செய்வது தொடர்பான விடயம் கலாச்சாரம் மற்றும் விழிப்புணர்வின்மை போன்ற காரணிகளால் சூடு பிடிக்கவில்லை. ஆனால் தற்போது அலிபாபா நிறுவனத்தின் முயற்சியானது மக்கள் தொகையைக் கட்டுப் படுத்த சீன அரசு மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாகவும் கருதப் படுவது குறிப்பிடத்தக்கது.

Related

முழு நிர்வாணமாக மேடை ஏறிய பிரபல நடிகர்: வெட்கத்தில் தலைகுனிந்த பெண் அமைச்சர்

சிறந்த நாடகங்களுக்கான விருது வழங்கும் விழாவில் முழு நிர்வாணமாக மேடை ஏறிய காமெடி நடிகரின் செயல் பெண் அமைச்சர் உள்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நேற்று இரவு நடந்த 27வது சி...

பல்சமய இல்ல இஸ்லாமிய வழிபாட்டிடத்தின் திறப்பு விழாவும் சுவிஸ் அரசு பிரதிநிதிகளின் ஒன்றுகூடலும்

சுவிஸின் தலைநகர் பேர்ண் நகரத்தில் கடந்த 14.12.2014 அன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் பண்பாடுகளுக்கிடையிலான கலந்துரையாடலுக்குமான ஓர் அமைப்பாக தோற்...

நேபாள பூகம்பத்தில் 80 லட்சம் பேருக்கு பாதிப்பு: ஐ.நா

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 14 லட்சம் பேர் உணவுக்காக பரிதவித்துவருகின்றனர். பூகம்பத்தால் காட்மாண்டு நகரில் ப...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item