அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழப்பு
அம்பாறை சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்ற...

http://kandyskynews.blogspot.com/2015/07/17.html

அம்பாறை சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி நேற்றிரவு 11.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.