பொத்துவில் பகுதியில் கஞ்சா கடத்திய இருவர் கைது
பொத்துவில் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கொண்டு சென்ற லொறி ஒன்று முடக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_67.html

பொத்துவில் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கொண்டு சென்ற லொறி ஒன்று முடக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகத்திற்கிடமான குறித்த லொறி நேற்று (04) மாலை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சுமார் ஏழு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹராம பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொத்துவில் நீதவான் முன்னிலையில் இன்று (05) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.