காவல் நாய் குரைக்காது போனால் அதனால் என்ன பயன்? மத்திய முறி தொடர்பில் ரணில் கேள்வி
மத்திய வங்கி முறி கொள்வனவின்போது மோசடிகள் இடம்பெற்றதாக கூறி, ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தமது சா...


மத்திய வங்கி முறி கொள்வனவின்போது மோசடிகள் இடம்பெற்றதாக கூறி, ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தமது சாட்சியம் பெறப்படவில்லை என்று பிரதமர் ரணி;ல் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே அரசாங்கத்தினால் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழு மோசடிகளில் அர்ஜூன மஹேந்திரனுக்கு தொடர்பில்லை என்று அறிவித்திருந்தது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர தலைமையிலான பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான “கோப்” இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு மஹேந்திரனுக்கு மோசடிகளில் தொடர்பிருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நேற்று மாலை நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, அரச கணக்காய்வாளர் திணைக்களம் இந்த விடயத்தை கண்டுபிடிக்கவில்லை.
அரசாங்கமே இந்த முறி கொள்வனவில் மோசடி இருப்பதை கண்டுபிடித்து விசாரணையை நடத்தியது. இந்தநிலையில் “காவல் நாய் இருந்தும் அது குரைக்காதுபோனால் அதனால் என்ன பயன்” என்று ரணில் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை குறித்த பிரச்சினை தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் கோப் குழுவிடம் தாம் சாட்சியமளிக்க கோரியபோதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே இந்தக்குழுவின் மீதான நம்பிக்கை தொடர்பில் கேள்வி எழுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.