தெஹிவளையில் மாணவர்கள் கடத்தப்பட்டதற்கும் எனக்கு தொடர்பில்லை: கடற்படை தளபதி
தெஹிவளையில் மாணவர்களை கடற்படையின் சில சிப்பாய்கள் கடத்திய சம்பவம், 2009ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் தமது கவனத்திற்கு கொண்டு வரப்படு...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_246.html

தெஹிவளையில் மாணவர்களை கடற்படையின் சில சிப்பாய்கள் கடத்திய சம்பவம், 2009ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் தமது கவனத்திற்கு கொண்டு வரப்படும் வரையில் தமக்கு தெரியாது என முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு கடற்படையினர் சிலரால் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடத்தல் விடயம் அப்போது கடற்படை தளபதியாகவிருந்த வசந்த கரன்னாகொடவுக்கு தெரிந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவர் நினைத்திருந்தால் மாணவர்களை விடுவித்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த கருத்தை மறுத்து கரன்னாகொட ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate