நாட்டில் 24 மணி நேரமும் புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன: பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர
நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான நிலை பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும், புலனாய்வுப் பிரிவினர் பணிய...
http://kandyskynews.blogspot.com/2015/06/24_26.html

நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான நிலை பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும், புலனாய்வுப் பிரிவினர் பணியாற்றுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள், விரிவாக ஆராயப்பட்டு பகுப்பாய் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடாத்தப்படுகிறது.
இக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டில் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளும்படியான எந்த உத்தரவையும் நாம் பெறவில்லை.
மேலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பாக இராணுவம் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate