‘விசா’ வாங்குவதற்காக மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர்: விருப்பம் நிறைவேறியதும் நிகழ்ந்த விபரீதம்

பிரித்தானியா நாட்டிற்கு செல்வதற்காக அந்நாட்டை சேர்ந்த மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர் ஒருவர் இரண்டு வாரங்களிலேயே அவரை விட்டு பிரிந்து செ...

visa_marrage_002
பிரித்தானியா நாட்டிற்கு செல்வதற்காக அந்நாட்டை சேர்ந்த மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர் ஒருவர் இரண்டு வாரங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றதால், மூதாட்டி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள Leicester என்ற நகரில் Patricia Hancocks என்ற 64 வயது மூதாட்டி ஒருவர் தனது 3 மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
25 வருடங்களுக்கு முன்னரே தனது கணவரை இழந்ததால், ஒரு அன்பான ஆணின் ஆதரவை அவர் பல வருடங்களாக எதிர்ப்பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவை சேர்ந்த Mondher Mezni என்ற 26 வயது வாலிபரை மூதாட்டி இணையத்தில் சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையே பழக்கம் மிக நெருக்கமானதால், வாரத்திற்கு 5 முறை அவர்கள் ஒன்லைன் மூலமாக பேசி வந்துள்ளனர். இவ்வாறு, பழக்கம் நெருக்கமாக செல்ல ‘தன்னை நேரில் பார்க்க வர முடியுமா’ என அந்த நபர் கேட்டுள்ளார்.
அப்போது தான் வாலிபரிடம் ஒரு விடயத்தை மறைத்து வந்தது மூதாட்டியை பயம் கொள்ள செய்துள்ளது.
கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கொரூரமான நோய் தாக்கியதில் அவர் சக்கர நாற்காலியில் மட்டுமே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த உண்மையை மறைக்காமல் அந்த வாலிபரிடம் சொல்ல, அவர் மூதாட்டியை பார்த்து ‘நீங்கள் ஒரு அழகு தேவதை. உங்கள் உடல் குறைபாடு தனக்கு எந்த விதத்திலும் பிரச்சனை அளிக்காது’ என கூற அந்த மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த வாலிபரை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து துனிசியாவிற்கு சென்றுள்ளார்.
துனிசியாவில் இருவரும் சந்திததும் வாலிபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக சொல்ல, அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார்.

இருவரின் நெருக்கமும் அதிகரிக்க, அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே பல முறை உடலுறவில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர், வாலிபரின் பெற்றோர்கள் ஆதரவுடன் திருமணமும் நடைபெற்றது.
திருமணத்திற்கான சுமார் 4,700 பவுண்டுகள் உட்பட அனைத்து செலவுகளையும் மூதாட்டியே ஏற்றுள்ளார். சில தினங்களுக்கு பிறகு, தனக்கு இங்கிலாந்திற்கு வர விருப்பம் இருப்பதாகவும், நீ முதலில் அங்கு சென்று எனக்கு விசா எடுக்க தேவையான வேலைகளை பார்க்குமாறு கூறி அந்த மூதாட்டியை அனுப்பி வைக்கிறார்.
இங்கிலாந்திற்கு திரும்பிய அந்த மூதாட்டி, தன்னிடம் இருந்த சேமிப்பை எல்லாம் பயன்படுத்தி கடும் சிரமத்திற்கு இடையே 8 மாதங்களில் தனது புதிய கணவருக்கு விசா எடுத்து முடிக்கிறார்.
தனது ஆசை கணவன் வருவார் என்றும், தன்னை வாழ்நாள் முழுவதும் அன்பாக பார்த்துக்கொள்வார் என்ற கற்பனையில் மிதந்த அந்த மூதாட்டிற்கு பேரிடி காத்திருந்துள்ளது.
இங்கிலாந்திற்கு வந்த அவரது கணவன் இரண்டு வாரங்கள் மட்டுமே மூதாட்டியுடன் தங்கி இருந்துள்ளார். பின்னர், வெளியே சென்றுவருவதாக கூறி சென்ற அந்த நபர் திரும்பி வரவே இல்லை.
2012ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் அளித்துள்ள அந்த மூதாட்டி, விசா வாங்குவதற்காக தனது உணர்வுகளுடன் விளையாடியை அந்த நபரிடமிருந்து விவாகரத்து பெற பணத்தை சேமித்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால், தற்போது துனிசா நாட்டிற்கு திரும்பி சென்றுள்ள அந்த நபர், மூதாட்டி கூறிய அனைத்து புகார்களையும் மறுத்ததுடன் இல்லாமல், அவருடன் சேர்ந்து வாழும் விருப்பம் எல்லை எனவும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் சில வாரங்களில் நீதிமன்றத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related

சிங்களவர்களைப் போல தமிழ், முஸ்லிம்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும்! - எரிக்சொல்ஹெய்ம்

தமிழர்கள் விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் ச...

தைவான் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 12 பேர் பலி

[caption id="" align="aligncenter" width="660"] விமானம் ஆற்றில் விழும்போது அவ்வழியாகச் சென்றவர்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவின் சில காட்சிகள்[/caption] . தைவான் நாட்டின் தலைவர் தைபெய்யில் ட்ரான்ஸ் ஏ...

சென்னையை சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் சிரியா எல்லையில் கைது! தீவிரவாதிகளுக்கு உதவசென்றனரா?

துருக்கி வழியாக சிரியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட 9 பேரிடம் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காக இவர்கள் பெங்களூருவில் இருந்து சிரியா என்றதாக சந்தேகிக்கப்பட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item