மஹிந்த - கோத்தபாய - பொன்சேகா குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்களா?

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதா...



சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையில் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது சகேதரர்களான கோத்தபாய, பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய சிறிலங்காவில் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணைகளை நடாத்தியது.

இந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த போதும் சிறிலங்கா அரசு கால அவகாசம் தேவை என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அது செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது இந்த விசாரணை அறிக்கையினை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது எனவும் ஐ.நாவில் குறித்த அறிக்கை உத்தியோக பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் அதன் பிரதி ஒன்றினை மைத்திரிக்கு கையளிக்கவுள்ளதாகவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

Related

தலைப்பு செய்தி 6915519742242838673

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item