இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் கூறும் அறிவுரை..!
என்னை போல் இருக்காமல் கல்லூரிக்குச் சென்று படித்து பட்டம் பெறுங்கள் என இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் அறிவுரை கூறியுள்ளார். பாடசாலை, க...

![]() |
என்னை போல் இருக்காமல் கல்லூரிக்குச் சென்று படித்து பட்டம் பெறுங்கள் என இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.
பாடசாலை, கல்லூரி பரீட்சைகளில் தோல்வி அடைந்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ்.
பரீட்சையில் தோல்வியடைந்தால் கூட பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜொப்ஸ், மார்க் ஜுக்கர் பேர்க் போன்றவர்களை போல வாழ்வில் வெற்றி பெற முடியும் என கூறுவார்கள்.
இந்நிலையில் அண்மையில் பில்கேட்ஸ் எழுதியுள்ள கட்டுரையில் "நான் கல்லூரிக்கு செல்லாமல் இடையிலேயே நின்றுவிட்டாலும், மென்பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தது என்னுடைய அதிஷ்டம். ஆனால் கல்லூரி பட்டத்துடன் வாழ்க்கையை தொடங்குவது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி" என தெரிவித்துள்ளார்.
|