வசிம் தாஜூதினின் வழக்கு இன்றைய விசாரணையில் நடந்தவை.
கொலை செய்யப்பட்ட இலங்கை றகர் வீரர் வசிம் தாஜூதினின் தொலைபேசி அழைப்புக்களை பரிசீலிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் கோர...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_55.html

கொலை செய்யப்பட்ட இலங்கை றகர் வீரர் வசிம் தாஜூதினின் தொலைபேசி அழைப்புக்களை பரிசீலிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு வந்தபோது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தாஜூதின் கொலை செய்யப்பட்ட விதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அவரது தொலைபேசிக்கு வந்த மற்றும் சென்ற அழைப்புக்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளதால் தனியார் தொலைபேசி நிறுவனத்திற்கு தகவல் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குறித்த தனியார் நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்புத் தகவல்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு எதிர்வரும் ஜூலை 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate