இஸ்ரேலின் அச்சுறுத்தலையும் மீறி காஸா முற்றுகையை உடைக்கும் கப்பல் பயணம் தொடர்கிறது
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நிர்வாகத்தின் கடும் எச்சரிக்கைக்கு மத்தியிலும் காஸாவின் ஒன்பது ஆண்டு முற்றுகையை முறியடிக்கும் முயற்சியாக கடல் பயணத்த...


ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நிர்வாகத்தின் கடும் எச்சரிக்கைக்கு மத்தியிலும் காஸாவின் ஒன்பது ஆண்டு முற்றுகையை முறியடிக்கும் முயற்சியாக கடல் பயணத்தை ஆரம்பித்திருக்கும் ஸ்கண்டினேவிய மீன்பிடி கப்பல் ஒன்று அந்த பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று போர்த்துக்கல் கடற்கரையை அடைந்தது.
மரியான் என்ற இந்த ஸ்கண்டினேவிய கப்பல் இரண்டு வாரங்கள் போர்த்துக்கல் லிஸ்பேன் துறைமுகத்தில் தங்கவுள்ளது. இந்த காலத்தில் கலாசார நிகழ்வுகள் மற்றும் 2010 ஆம் ஆண்டு காஸா துறைமுகத்தை அடைய முயன்று இஸ்ரேல் இராணுவத்தால் தாக்குதலுக்கு இலக்கான துருக்கியின் மாவி மர்வான் கப்பல் குறித்த ஆவணப்படமும் காண்பிக்கப்படவுள்ளது. இஸ் ரேல் இராணுவத்தின் தாக்குதலில் படகில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மே 10 ஆம் திகதியே ஸ்கண்டினேவிய படகு சுவீடனில் இருந்து காஸா நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி களை வழங்கும் மூன்றாவது முயற்சியாகவே இந்த படகு பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1.7 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் காஸா ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கடல், வான் மற்றும் தரை வழியாக மிக மோசமான முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு ளது.
மரியான் படகின் பயணம் குறித்து ஆக்கிரமிப்பு இஸ்ரேல் கடந்த மே 14 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அனுமதி இல்லாத எந்த ஒரு படகும் உள்ளே நுழைய இடமளிக்கப்பட மாட்டாது என்று அது எச்சரித்துள்ளது. காஸா கடற்கரையை நோக்கி பயணிக்கும் இரண்டாவது முயற்சி கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கிரேக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டது.
தற்போதைய மூன்றாவது முயற்சியில் குறித்த ஸ்கண்டினேவிய படகு சுவீடன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் கடற்கரைகள் ஊடாக பயணத்தை தொடர்ந்துள்ளது. இந்த படகு ஜூ ன் மாத இறுதி வாரத்தில் காஸாவை அடைய திட்டமிட்டுள்ளது.