BBS தேரர்களுக்கு எதிராக, குற்றப்பத்திரம் தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு
மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் தேசிய பல சேனாவின் உறுப்பினருமான வட்டரக்க விஜித்த தேரரை மறைத்து வைத்திருப்பதாக கூறி, கொள்ளுப்பிட்டி...


மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் தேசிய பல சேனாவின் உறுப்பினருமான வட்டரக்க விஜித்த தேரரை மறைத்து வைத்திருப்பதாக கூறி, கொள்ளுப்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் 2014ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் அறுவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரத்தை ஜூலை 19ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பியந்த லியனே, பொலிஸாருக்கு இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.