மைத்திரியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_37.html
![]() |
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க தொடர்ந்தும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலேயே பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் அண்மையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, இராணுவ வசமிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு முற்றாக கலைக்கப்பட்டதுடன், மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு பொலிஸ் பாதுகாப்புப் பிரிவிடம், ஒப்படைக்கப்பட்டது.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட எஸ்.எம்.விக்கிரமசிங்க தற்போது பதவி நிலை குறைக்கப்பட்டுள்ளார்.
|



Sri Lanka Rupee Exchange Rate