தன்னை தள்ளி விட்ட தோனியை பழிவாங்கிய முஸ்பிகுர் ரஹ்மான்
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மிர்புரில் நேற்று நடைபெற்றது. இந்த ...


இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மிர்புரில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 79 ஓட்டங்களால் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியாவுக்கு எதிராக 30 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆடிய பங்களாதேஷ் அணி பெற்ற 4 ஆவது வெற்றி இதுவாகும். அதிலும் இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது.
இந்திய அணி 123/4 என்ற நிலையில் ஆட்டத்தின் 25 ஆவது ஓவரில் அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்பிகுர் ரஹ்மான் தோனிக்கு யோக்கர் பந்தினை வீச அதனை எதிர்கொண்ட தோனி தடுத்தாடி விரைவாக ஒரு ஓட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முயன்றார்.இதன்போது தோனியின் ஓட்டத்திற்கு தடையாக நின்ற முஸ்பிகுர் ரஹ்மானை பலமா இடித்துத் தள்ளினார்.
உடனடியாக நடுவரிடம் சென்ற தோனி தனது ஓட்டத்திற்கு தடையாக நின்றரமையினாலேயே அவ்வாறு தள்ளியதாக கூறினார். எனினும் இந்த எதிர்பாராத நிகழ்வால் நிலை தடுமாறிய முஸ்பிகுர் ரஹ்மான் தொடர்ந்து பந்து வீசாமல் ஓய்வு அறை நோக்கிச் சென்று விட்டார்.
மேலும் அடுத்த ஓவரிலேயே சகிப் அல் ஹசனின் பந்துவீச்சில் தோனி ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் மீண்டும் களம் புகுந்த அறிமுக வீரர் முஸ்பிகுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுக வீரர் பங்களாதேஷ் அணி சார்பில் 5 விக்கெட்டுக்களை சரிப்பது இது இரண்டாவது முறையாகும். அத்துடன் இவர் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.