நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படுமா?
சிறிலங்காவின் பாராளுமன்றம் நாளை நள்ளிரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும், எதிர்க்கட்...

ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இது குறித்து கேட்டபோது 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
தேர்தல் முறைமை தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது. அதேவேளை, நாளை முற்பகல் 9.30 முதல் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதம் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டெம்பர் மாதத்தில் புதிய பாராளுமன்றம் நிறுவப்படும் என இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியிருந்தார்.
செப்டெம்பர் மாதத்தில் புதிய பாராளுமன்றம் நிறுவப்படுமாயின் ஓகஸ்ட் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 65 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனினும் இந்த வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அண்மைக்காலமாக அரசியல் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.