மஹிந்தவின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குவாரா மைத்திரி?
பதவியை இழந்து தவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஐக்கிய மக்...


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தை கைப்பற்ற மஹிந்த முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிக்கு நெருக்கமானவர்கள் மூலம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளாரக போட்டியிட மஹிந்த முயற்சித்த போதும், ஜனாதிபதி மைத்திரி அதற்கான அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மஹிந்த தரப்பினரினால் அக்கூட்டணியின் அதிகாரத்தை உறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நிறைவேற்று சபையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 25 பேர் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களாகும்.
ஏனையோர் கூட்டணியின் பங்காளி கட்சிகளான சமசமாஜ கட்சி, கமியூனிஸ்ட் கட்சி, தேச விமுக்த்தி ஜனதா கட்சி மற்றும் மக்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 25 உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும் பங்காளி கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையும் மஹிந்த தரப்பினர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட குழு காலத்தை வீணடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவினால் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதியை நியமிக்க ஜனாதிபதியை இணங்க வைப்பதற்காக உருவாக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அரசாங்கம் உத்தியோபூர்வமாக பொது தேர்தலை அறிவிக்கும் போது மஹிந்த குழுவினால் ஐக்கிய மக்கள் சுதந்திர சுதந்திர கூட்டணியின் அதிகாரத்தை உத்தியோகபூர்வமாக கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.