உடம்பில் குளுகோஸ் ஏற்றியபடி வேகமாக வண்டிய ஓட்டிய தில்லான பெண் (வீடியோ இணைப்பு)
உடம்பில் குளுகோஸ் ஏற்றியபடி காரை ஓட்டிச்சென்ற சீனப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் கய்ஸூ மாகாணத்தில் பெண் ஒருவர், தனது உடம்பில்...


சீனாவின் கய்ஸூ மாகாணத்தில் பெண் ஒருவர், தனது உடம்பில் குளுகோஸ் ஏற்றியபடி காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
ஒரு கையால் குளுகோஸ் பாட்டில் பொருத்தப்பட்ட கம்பியைப் பிடித்தபடியும், மறுகையை ஸ்டியரிங்கில் வைத்து வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார்.
குளுகோஸ் பாட்டிலும், அதை தாங்கி நிற்கும் கம்பியும் வெளியில் நீட்டியபடி இருந்துள்ளது, ஆனால் இதனால் சாலைபோக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த பெண் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது, இந்த காட்சியை சாலையில் சென்ற இன்னொரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.