வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி யோசனை
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_595.html
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் வன்னியாமிகே ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எந்த மதிப்பையும் கொடுப்பதில்லை என்பதுடன் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவையாற்றுவதிலும் போதிய அக்கறையை காட்டுவதில்லை என மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் கூறியுள்ளார்.
அரசாங்க அதிபர் சிங்களவர் என்பதற்காக தாம் இந்த யோசனையை கொண்டு வரவில்லை எனவும் மூவின மக்களின் எதிர்ப்புகள் காரணமாக இந்த யோசனையை தாம் கொண்டு வந்ததாகவும் லிங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate