விரைவில் பொதுத் தேர்தல்: ஜனாதிபதி உறுதி- சிவில் உறுப்பினர்கள் தெரிவு ஒத்திவைப்பு
பொதுத் தேர்தல் ஒன்றை விரைவில் நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_529.html
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாட்டில் பொது தேர்தலை ஒன்றை நடத்த முடியும் என தெரிவித்த ஜனாதிபதி,
எது எவ்வாறாகயிருப்பினும், நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து அபிவிருத்தி நடடிவடிக்கைகளும் தேர்தல் இடம்பெறும் காலங்களிலும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும், அவை இடைநிறுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
சிவில் உறுப்பினர்கள் தெரிவு ஒத்திவைப்பு
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் உறுப்பினர்களை நியமிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் உறுப்பினர்கள் மூவரை தெரிவு செய்யும் நடவடிக்கையே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் உறுப்பினர்களை இன்றைய தினம் நியமிக்கமுடியும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.