ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து அவரையும் அவருடன் குற...

![]() |
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா |
இன்று திங்கட்கிழமை (01-06-2015) காலை 11 மணியளவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார், சட்டத் துறைச் செயலர் தங்கப்பா ஆகியோர் அளித்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டதாகவும் இறுதியில் இந்த வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென முடிவு எடுக்கப்பட்டதாகவும் கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்