தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் ஆணையாளர்
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கக்கடிதங்களை அனுப்பவுள்ளார். ...


இதன்போது கட்சிகளின் சார்பில் போட்டியிடவுள்ளவர்களின் பெயர்களை அவர் கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தை பொறுத்தவரையில் குறைந்தளவு காலமே ஆயத்தப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனைத்து விடயங்களும் உரிய திகதிகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் சின்னங்கள் தொடர்பில் அடுத்த வாரம் அளவில் இறுதிப்படுத்தல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் 64 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடாவிட்டால், நான்கு கட்சிகளின் நிலை குறித்து ஆராய வேண்டி யேற்படும் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.