உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க கோவை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றைத் தயாரிப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...


இலங்கையின் 335 பிரதேச, நகர, மாநகர சபைகளின் 4 ஆயிரத்து 486 உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும் விதத்தில் பொது நிர்வாக அமைச்சர் கருஜயசூரிய மற்றும் மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் ஆகியோர் ஒன்றிணைந்து சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் 104 உறுப்பினர்களுக்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருமண பதிவுக் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது திருமண பதிவு கட்டணமாக அறவிடப்படும் ஐயாயிரம் ரூபாயை ஆயிரம் ரூபாவாக குறைப்பதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இந்த கட்டண குறைப்பு, 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.