தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி உறுதி
தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காண தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_457.html

தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காண தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் மக்களை மீள்குடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாழும் மக்கள் அச்சமும், சந்தேகமும் இன்றி வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

வடக்கில் காணி பிரச்சினை என்பது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். காணிகளை வழங்கும் போது சில சிக்கல் நிலைமைகளும், குறைகளும் இருக்கக் கூடும். எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்து, சிக்கலான நிலைமைகளை அடையாளம் கண்டு, குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து,உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.



வடக்கு மாகாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் வைத்திருந்த, சுமார் ஆயிரம் ஏக்கர் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 425 ஏக்கர் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்து கொண்டு காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளித்தார். நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், காணி அமைச்சர் டி.எஸ். குணவர்தன, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் பலியக்கார உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வளலாய் மற்றும் வசாவிளான் மக்களுக்கு ஜனாதிபதியால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
9
Share
1
Tweet


Sri Lanka Rupee Exchange Rate