பிரித்தானியா மகாராணி இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட நிருபர்: மன்னிப்பு கோரிய பி.பி.சி நிறுவனம்

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டதாக தவறான தகவல் வெளியிட்ட தனது நிருபரின் செயலுக்காக பி.பி.சி நிறுவனம் மன்னிப்பு கோரியு...

queen_elizabethdead_001
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டதாக தவறான தகவல் வெளியிட்ட தனது நிருபரின் செயலுக்காக பி.பி.சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பிரித்தானியா நாட்டை சேர்ந்த பி.பி.சி(BBC) தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் Ahmen Khawaja(31) என்பவர் நிருபராக கடந்த ஒருவருடமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நிலை காரணமாக சற்று முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில், ‘எலிசபெத் ராணி இறந்துவிட்டார்’(Oueen Elizabeth has died) என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
பின்னர், சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கம் செய்த அவர், ‘முந்திய செய்தி தவறானது என்றும், ராணி இறக்கவில்லை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தவறுக்காக வருந்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ஆனால், அவர் ‘ராணி இறந்துவிட்டார் என செய்தி வெளியிட்டதும், அதனை NBC, அமெரிக்காவின் CNN, ஜேர்மனியின் Bild உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பார்த்து அந்த செய்தி குறித்து விசாரணை செய்தன.
இந்நிலையில், Buckingham அரண்மனையை சேர்ந்த அதிகாரிகள் ‘ராணி லண்டனில் உள்ள King Edward மருத்துவமனைக்கு வருடாந்திர உடல் பரிசோதனைக்கு தான் வந்தார் என்றும், இது வழக்கமானது தான். மேலும், அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார் எனவும் விளக்கம் அளித்தனர்.
தனது செய்தியாளர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பி.பி.சி நிறுவனம் அது குறித்து விசாரணை செய்தது.
பின்னர், ‘தனது செய்தியாளரின் கைப்பேசி மர்ம நபர்களார் ‘ஹேக்’ செய்யப்பட்ட தவறான செய்தியை வெளியிட்டதாக விளக்கம் அளித்தது.
எனினும், மக்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்டதற்காக மன்னிப்பு கோருவதாக பி.பி.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related

உலகம் 874968943791659653

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item