உலகளவில் சட்ட விதிகளின்படி சிறப்பாக ஆட்சி செய்யும் முதல் 10 நாடுகளின் பட்டியல்
சட்ட விதிகளை முறையாக பின்பற்றி ஆட்சி புரிந்து வருவதில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் சுமார் 102 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்...
http://kandyskynews.blogspot.com/2015/06/10.html

Bill Neukom என்பவரால் கடந்த 2006ம் ஆண்டு Rule of Law Index என்பதை உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் World Justice Project என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2015ம் ஆண்டில் ‘சட்ட விதிகளை அடிப்படையாக கொண்டு அதனை மீறாமல் முறையாக ஆட்சி செய்யும் நாடுகளின் பட்டியலை அண்மையில் வெளியிடப்பட்டது.
சட்ட விதிகளின் படி ஊழலற்ற ஆட்சியை நடத்துவது, அடிப்படை உரிமைகளை காப்பது, வெளிப்படையான அரசாக செயல்படுவது, ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறந்து விழங்குவது, உள்நாட்டு மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான விவகாரங்களில் சிறந்து விழங்குவது உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில் நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல்:
1.டென்மார்க்
2.நோர்வே
3.ஸ்வீடன்
4.ஃபின்லாந்து
5.நெதர்லாந்து
6.நியூசிலாந்து
7.ஆஸ்திரியா
8.ஜேர்மனி
9.சிங்கப்பூர்
10.அவுஸ்திரேலியா
சர்வதேச நாடுகளான அமெரிக்கா -19, ரஷ்யா -75, பிரித்தானியா -12, பிரான்ஸ் -18, கனடா -14 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
இந்த ஆய்வில் இலங்கை 58-வது இடமும், இந்தியா 59-வது இடமும் வகிக்கின்றன.
102 நாடுகளின் பட்டியலில் சட்ட விதிகளை பின்பற்றுவதில் பாகிஸ்தான் -98, கம்போடியா -99, ஜிம்பாப்வே -100, ஆப்கானிஸ்தான் -101, வெனிசுலா -102 ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களில் உள்ளன.


Sri Lanka Rupee Exchange Rate