லிந்துலையில் மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் கைது
லிந்துலை, மெராயா பகுதியில் நான்கு மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான ஆ...


லிந்துலை, மெராயா பகுதியில் நான்கு மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான ஆசிரியர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
சந்தேகநபரான ஆசிரியர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாடசாலை வகுப்பறையில் வைத்து 8 மற்றும் 9 வயதான நான்கு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவிகளை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.