பண்டாரவளையில் திடீர் சுற்றிவளைப்பு: 3 இலட்சம் ரூபா பெறுமதியான பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் எரிப்பு
பண்டாரவளை நகரில் பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ...


பண்டாரவளை நகரில் பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய பண்டாரவளை நகரில் நேற்று (19) திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக பண்டாரவளை மாநகர சபையின் பிரதம சுகாதார பரிசோதகர் ஏ.ஆர். திசாநாயக்க தெரிவித்தார்.
பண்டாரவளை நகரிலுள்ள சுமார் 80 வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமை தொடர்பில் 25 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர்கள் மீதான வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகவும் மாநகர சபையின் பிரதம சுகாதார பரிசோதகர் ஏ.ஆர். திசாநாயக்க குறிப்பிட்டார்.