ஜனாதிபதி பதவியின் மீதே எனக்கு ஆசை!- சோமவன்ச அமரசிங்க – ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிட தீர்மானம்
ஜனாதிபதி பதவியில் ஆசை கொண்டிருந்த போதும், தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஆசைக்கொண்டிருக்கவில்லை என்று ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோ...


எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே அந்த பதவியில் இருக்க தாம் ஆசைக்கொண்டிருந்ததாக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் புதிதாக அமைக்கப்பட்ட தமது கட்சியான ஜனதா சேவக பக்சயவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதில் தவறு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
ஜே.வி.பி 5 உறுப்பினர்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. சுமூக நீதிக்காக அமைக்கப்பட்ட இந்த கட்சி இன்று அரசியலில் தமது அடையாளத்தை இழந்துள்ளதாக அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதனை தமது புதிய கட்சியின் மூலம் நிவர்த்தி செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம்: சோமவன்ச அமரசிங்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும், மக்கள் சேவை முன்னணியின் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முன்னணி மற்றும் பிவித்துரு ஹெட்டக் ஆகிய அமைப்புக்களுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
ஜே.வி.பி கட்சி தனது கொள்கைகளிலிருந்து முற்று முழுதாக மாறி பணத்தை முதனிலையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாக சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.